பூமிக்கு மிக நெருக்கமாக வருகிறது அபோபிஸ் விண்கல்

September 13, 2024

அபோபிஸ் 99942 என்று அழைக்கப்படும் விண்கல், வரும் 2029 ஏப்ரல் 13 அன்று பூமிக்கு சுமார் 32,000 கி.மீ. தொலைவில் மிக நெருக்கமாக வரும் என்று தெரியவந்துள்ளது. அப்போது, இந்த விண்கல்லை புவியின் கிழக்கு அரைக்கோளத்தில் தொலைநோக்கி தேவையின்றி கண்காணிக்க முடியும். எனவே, விஞ்ஞானிகள் இது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அபோபிஸ் விண்கல்லால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் அதன் சுற்றுப் பாதையை […]

அபோபிஸ் 99942 என்று அழைக்கப்படும் விண்கல், வரும் 2029 ஏப்ரல் 13 அன்று பூமிக்கு சுமார் 32,000 கி.மீ. தொலைவில் மிக நெருக்கமாக வரும் என்று தெரியவந்துள்ளது. அப்போது, இந்த விண்கல்லை புவியின் கிழக்கு அரைக்கோளத்தில் தொலைநோக்கி தேவையின்றி கண்காணிக்க முடியும். எனவே, விஞ்ஞானிகள் இது பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அபோபிஸ் விண்கல்லால் பூமிக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் அதன் சுற்றுப் பாதையை துல்லியமாக கணித்த பிறகு, குறைந்தது அடுத்த நூற்றாண்டுக்கு இதனால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்கல்லை ஆய்வு செய்ய, "ஒசைரிஸ்-அபெக்ஸ்" விண்கலத்தை நாசா அனுப்ப உள்ளது. வரும் 2029 ல் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மூலம், அபோபிஸ் விண்கல்லின் மேற்பரப்பை பற்றிய ஆழமான தகவல் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu