ஆப்பிள் நிறுவனம், ஐஓஎஸ் 18 இயங்குதளத்துக்கான புதிய மேம்படுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெர்ஷனில் மேம்படுத்தப்பட்ட சிரி, தனிப்பயனாக்க கூடிய முகப்புத் திரை மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட கட்டுப்பாட்டு மையம் போன்ற பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஐபோன் 16 வரிசை மற்றும் அதற்கு முந்தைய மாடல்களான ஐபோன் 15, 14 ஆகியவற்றில் இந்த புதிய இயங்குதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். பயனர்கள் தங்கள் ஐபோனில் "அமைப்புகள்" என்ற பகுதிக்குச் சென்று "பொது" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் "மென்பொருள் புதுப்பிப்பு" என்ற பகுதிக்குச் சென்று இந்த புதிய வெர்ஷனைப் பெற்றுக்கொள்ளலாம். பயன்பாடுகள் மற்றும் விட்ஜெட்டுகளை மிகவும் எளிதாக இடமாற்றம் செய்வது, புகைப்படங்களை எளிதாக தேடி கண்டுபிடிப்பது, சஃபாரி இணைய உலாவியில் இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மூலம் பக்கங்களை சுருக்கமாகக் காட்டும் வசதி, வாசிப்பு பயன்முறை போன்றவை புதிய வெர்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.