வரும் செப்டம்பர் 12ஆம் தேதி, ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் நிகழ்வு நடைபெற உள்ளது. அந்த நாளில், ஐபோன் 15 அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஐபோன் 15 தவிர, புதிய வகை ஆப்பிள் வாட்ச்களும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்கள், வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும். அந்த வகையில், ஐபோன் 15 வரிசை போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகியவற்றுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஐஓஎஸ் இயங்கு தளத்திற்கான புதிய மேம்படுத்தலும் வெளிவரலாம் என கூறப்படுகிறது. இந்திய நேரப்படி, வரும் செப்டம்பர் 12ஆம் தேதி இரவு 10:30 மணிக்கு, வொண்டர்லஸ்ட் நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது.