ஆப்பிள் நிறுவனம் ஒரு புதிய ரோபோ சாதனம் ஒன்றை உருவாக்கி வருகிறது. இது ஐபேட் போன்ற திரையையும், ரோபோட்டிக் ஆர்ம் (robotic arm) ஒன்றையும் இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வீட்டு உபயோக பொருட்களை நிர்வகிக்கும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படும். J595 என்கோட் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நூற்றுக்கணக்கான பேர் பணியாற்றுகின்றனர். கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிர்வாகிகளால் இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த சாதனம் 2026 அல்லது 2027 ஆம் ஆண்டில் சுமார் $1,000 விலையில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை Siri உள்ளிட்ட ஆப்பிள் AI தொழில்நுட்பத்துடன் இணைத்து, வீடியோ கான்ஃபரன்சிங் சாதனமாகவும், வீட்டு பாதுகாப்பு சாதனமாகவும் பயன்படுத்த முடியும். முன்னதாக Apple Watch மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், அண்மை காலங்களில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.