புதிய ஸ்பைவேர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்தது ஆப்பிள்

April 11, 2024

இந்தியாவிலும் மற்றும் பிற 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிறுவனம் புதிய ஸ்பைவர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று 12 மணி அளவில் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. இது என் எஸ் ஓ குழுமத்தின் பிகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது போன்ற ஊடுருவல் முயற்சிகள் நிகழும்போது ஆப்பிள் நிறுவனம் இது போன்ற எச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளது. சுமார் 92 நாடுகளை சேர்ந்த […]

இந்தியாவிலும் மற்றும் பிற 91 நாடுகளிலும் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நிறுவனம் புதிய ஸ்பைவர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி இன்று 12 மணி அளவில் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பியுள்ளது. இது என் எஸ் ஓ குழுமத்தின் பிகாசஸ் ஸ்பைவேரை விடவும் மிக மோசமானது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது போன்ற ஊடுருவல் முயற்சிகள் நிகழும்போது ஆப்பிள் நிறுவனம் இது போன்ற எச்சரிக்கை தகவல்களை அனுப்பியுள்ளது. சுமார் 92 நாடுகளை சேர்ந்த ஆப்பிள் பயனாளர்களுக்கு இந்த எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் 150 நாடுகளை சேர்ந்த பயனர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. ஆப்பிள் ஐடியில் இணைக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் குறுந்தகவல் என இரண்டிலும் இந்த தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் எத்தனை பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்த தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் எங்கிருந்து நிகழ்த்தப்படுகிறது என்பது குறித்து ஆப்பிள் தகவல் அளிக்க மறுத்து விட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu