தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 1-ந்தேதி முதல் விண்ணப்பம் வினியோகம்

April 27, 2023

தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் […]

தமிழகத்தில் உள்ள தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் வினியோகம் வருகிற மே 1-ந் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் மே 9-ந் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 8-ந்தேதி வெளியாகும் நிலையில் இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் என்று தனியார் கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியான பிறகு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu