சென்னை விமான நிலையத்தில் சேவை பணிகளுக்கு 2 தனியார் ஏஜென்சிகள் நியமனம்

November 23, 2022

சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்கு கூடுதலாக 2 தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று முடிவுக்கு பிறகு, தற்போது விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்காக புதிதாக மேலும் 2 தனியார் ஏஜென்சிகளை இந்திய விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது. இந்த புதிய 2 ஏஜென்சிகளில் சுமார் 4 ஆயிரம் பேர் […]

சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்கு கூடுதலாக 2 தனியார் ஏஜென்சிகள் நியமிக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்று முடிவுக்கு பிறகு, தற்போது விமான சேவைகள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பணிகளுக்காக புதிதாக மேலும் 2 தனியார் ஏஜென்சிகளை இந்திய விமான நிலைய ஆணையகம் நியமித்துள்ளது. இந்த புதிய 2 ஏஜென்சிகளில் சுமார் 4 ஆயிரம் பேர் வரை பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இதனால் 4 ஆயிரம் பேருக்கு கூடுதல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

2023-ம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் இவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது, தரை இறங்குவது போன்றவைகள் அதிக தாமதம் இன்றி செயல்படும். பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்து இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu