பள்ளிகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய 30 கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் பள்ளிகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய, 30 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதலில், மாணவர்கள் வருகை பதிவேட்டில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டதால், பல பள்ளி அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன்படி புதிய கட்டுப்பாடுகள் மூலம், கல்வி தரத்தை உயர்த்துவது என்பது இதற்கான நோக்கம் ஆகும். இந்த கண்காணிப்பு அதிகாரிகள், கல்வி திட்டங்கள் மற்றும் மாணவர்களின் நலன் பற்றிய பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதற்காக அரசுக்கு மாதாந்திர அறிக்கைகள் வழங்கப்படும்.