குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து புதிய நீதிபதிகளை நியமனம் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு ஐந்து நீதிபதிகள் நிரந்தரமாக நியமிக்கப்படுவதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். கோலீஜியம் பரிந்துரையை ஏற்று, நீதிபதி விக்டோரியா கவுரி, பி.பி. பாலாஜி, கே.கே. ராமகிருஷ்ணன், ஆர். கலைமதி மற்றும் கே.ஜி. திலகவதி ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ஷமீம் அகமது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.