பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சோசியல் மீடியா எக்ஸ்போர்ட் குழுவினை சமூக வலைதள கணக்குகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்பட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள், பிரசுரங்களை தாண்டி சமூக வலைத்தளம் வழியாக பிரசுரம் செய்வது அதிகரித்து வருகிறது. இன்னிலையில் தேர்தல் ஆணைய உத்தரவின் பெயரில் லோக்சபா தொகுதியில் சோசியல் மீடியா எக்ஸ்போர்ட் குழு என்ற மூன்று பேர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய தகவல் ஆணைய மாவட்ட அலுவலர் தலைமையில் இயங்கும். அதில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சமூக வலைதள கணக்குகள் கண்காணிக்கப்படும். மேலும் இதில் உள்ள விளம்பரங்கள் பிரசாரங்கள் ஆகியவை கணக்கீடு செய்யப்படும். இச்செலவு தொகை பிரச்சார செலவு தொகையில் சேர்க்கப்படும். மேலும் வலைதளங்களில் பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்தால் அதனை வேட்பாளர் செலவு கணக்கில் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.