ராணுவ அதிகாரியின் உடல், 58 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கடந்த 1965-ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள சுற்றுலா நகரான டார்ஜிலிங்குக்கு வந்திருந்த அமெரிக்கா ராணுவ வீரர் பிக்கெட் மாரடைப்பால் இறந்தார். அவரது உடல் அங்குள்ள சிங்டம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் பிக்கெட்டின் உடல் பாகங்களை தோண்டியெடுத்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்று அங்கு மறுஅடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. 58 ஆண்டுகளுக்கு பிறகு அவரது உடல் தோண்டியெடுக்கப்பட்டு, இம்மாதம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறை தோட்டத்தில் மறுஅடக்கம் செய்யப்படுகிறது.