மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்த ஏற்பாடு

இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த ஏற்பாடு செய்து வருகிறது. நாட்டில் 18வது பாராளுமன்ற தேர்தலில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது அக்டோபர் மாதம் முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் அரியானா சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 3ம் தேதியும், மகாராஷ்டிராவில் நவம்பர் 26ஆம் […]

இந்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த ஏற்பாடு செய்து வருகிறது.
நாட்டில் 18வது பாராளுமன்ற தேர்தலில் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது அக்டோபர் மாதம் முதல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் அரியானா சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 3ம் தேதியும், மகாராஷ்டிராவில் நவம்பர் 26ஆம் தேதியும், ஜார்க்கண்ட்டில் ஜனவரி 5ஆம் தேதியும் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தற்போது தொடங்கியுள்ளது. மேலும் ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu