செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ் 24 கைபேசிகள்

January 19, 2024

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்24 வரிசை கைபேசிகளை வெளியிட்டுள்ளது. இந்த கைபேசிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உரையாடல்களை நிகழ் நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கைபேசி சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப போட்டி தொடங்கியுள்ளது. கடந்த புதன்கிழமை சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி எஸ் 24 வரிசை கைபேசிகள், கூகுளில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ் 24, கேலக்ஸி எஸ் […]

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்24 வரிசை கைபேசிகளை வெளியிட்டுள்ளது. இந்த கைபேசிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, உரையாடல்களை நிகழ் நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்யும் செயற்கை நுண்ணறிவு அம்சம் இவற்றில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கைபேசி சந்தையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப போட்டி தொடங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமை சாம்சங் நிறுவனம் வெளியிட்ட கேலக்ஸி எஸ் 24 வரிசை கைபேசிகள், கூகுளில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ் 24, கேலக்ஸி எஸ் 24 பிளஸ், கேலக்ஸி எஸ் 24 அல்ட்ரா என 3 மாடல் கைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த கைப்பேசிகளின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் 80000 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை வாங்குவதற்கான முன்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu