அருணாச்சல் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி - சீனா திட்டவட்டம்

March 18, 2024

அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாப்பதில் கவனமாக இருப்பதாகவும் சீன ராணுவம் கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை இந்தியா நிராகரித்தது. இந்நிலையில், சீன ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா கூறி வருகிறது. […]

அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாப்பதில் கவனமாக இருப்பதாகவும் சீன ராணுவம் கூறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனை இந்தியா நிராகரித்தது. இந்நிலையில், சீன ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் என்று சீனா கூறி வருகிறது. அதோடு அதற்கு சாங்னான் என பெயரிட்டுள்ளது. இந்திய தலைவர்கள் எவரேனும் அருணாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் செய்தால் உடனடியாக சீனா எதிர்ப்பு தெரிவிக்கிறது. அதை இந்தியா நிராகரிக்கிறது. இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்திய சீன எல்லைக்கு ராணுவ படைகள் மற்றும் தளவாடங்களை கொண்டு செல்வதற்கு இமயமலைப் பகுதியில் 13,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட செயலா சுரங்க பாதையை மோடி திறந்து வைத்தார். அதோடு பிற வடகிழக்கு மாநிலங்களில் 55,600 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். மோடியின் இந்த பயணத்துக்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து சீன அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாங் கூறுகையில் இந்திய சீன எல்லையில் இயல்பு நிலைக்கு சூழலை கொண்டு வர இரு தரப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளது. அப்படி இருக்கும்போது தற்போது இந்தியாவின் செயல்பாடுகள் இதற்கு முரணாக உள்ளது. எல்லை விவகாரத்தை சிக்கலாக்கும் வகையில் செயல்படுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu