அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக சம்மன்

March 18, 2024

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை சமன் அனுப்பியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக இல்லை. மேலும் இந்த அமலாக்கத்துறை சம்மன் சட்ட விரோதமானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து […]

டெல்லி அரசின் மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9வது முறையாக அமலாக்கத்துறை சமன் அனுப்பியுள்ளது.

டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக இல்லை. மேலும் இந்த அமலாக்கத்துறை சம்மன் சட்ட விரோதமானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வருகிறார். அதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிடும் படி டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதன்படி மார்ச் 16 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேரில் ஆஜராகி ஜாமீன் பெற்றார் கெஜ்ரிவால். பின்னர் மார்ச் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு 9 வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu