ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்கள் ஹாக்கியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஹாக்கி பிரிவில் இந்திய அணி மற்றும் சிங்கப்பூர் அணி விளையாடியது. இந்திய அணி 6-0 என முதல் பாதியில் முன்னிலை வகித்தது. பின்னர் இரண்டாம் பாதியில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. இதில் இந்தியா 16-1 என்ற கோல் கணக்கில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.