லல்லுபிரசாத் யாதவின் உதவியாளரின் ரூபாய் 57 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய ரெயில்வே மந்திரி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லல்லுபிரசாத் யாதவின் முன்னாள் உதவியாளர், அமித் கத்யால், ரூபாய் 57 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அவர், பீகாரின் முன்னாள் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவின் வியாபார கூட்டாளி ஆவார். லல்லு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான ரெயில்வே நிலம் தொடர்பான வழக்கில், கத்யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மற்றும் அவரது கூட்டாளிகள் வெளிநாடுகளில் ரூபாய் 200 கோடிக்கு மேல் முதலீடு செய்ததாக தெரியவந்துள்ளது.