இன்று பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வரவுள்ளது - நாசா எச்சரிக்கை

November 24, 2022

இன்று பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வரவுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. Asteroid 2022 WH2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல், நவம்பர் 24 ஆம் தேதி, பூமியில் இருந்து சுமார் 4.8 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு வரவுள்ளது. மணிக்கு சுமார் 24843 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி இந்த விண்கல் பயணித்து வருகிறது. இது பூமிக்கு மிகவும் நெருக்கமாக வர உள்ளதால், இதனை ‘அபாயகரமான’ விண்கல்லாக நாசா வரையறுத்துள்ளது. இது பூமிக்கு நெருக்கமாக வரும் பொழுது, […]

இன்று பூமிக்கு மிக அருகில் விண்கல் ஒன்று வரவுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Asteroid 2022 WH2 என்று பெயரிடப்பட்டுள்ள விண்கல், நவம்பர் 24 ஆம் தேதி, பூமியில் இருந்து சுமார் 4.8 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு வரவுள்ளது. மணிக்கு சுமார் 24843 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி இந்த விண்கல் பயணித்து வருகிறது. இது பூமிக்கு மிகவும் நெருக்கமாக வர உள்ளதால், இதனை ‘அபாயகரமான’ விண்கல்லாக நாசா வரையறுத்துள்ளது. இது பூமிக்கு நெருக்கமாக வரும் பொழுது, புவியீர்ப்பு விசையால் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளதால் இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விண்கல் பூமியுடன் மோதாது எனவும், பூமியை கடந்து செல்லும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. “தினமும், நூற்றுக்கணக்கான சிறிய விண்கற்கள் பூமியுடன் மோதுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, வெகு சில விண்கற்கள் ஆபத்தை விளைவிப்பவையாக இருக்கும். இது சாதாரணமான வானியல் நிகழ்வு. இதனால் அச்சம் ஏதுமில்லை” என்று நாசா தெளிவு
படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu