அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி - இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

August 24, 2023

வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்தியாவின் அஸ்திரா பிவிஆர் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. நேற்று, கோவா கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து 20000 அடி உயரத்தில் பறந்து சென்ற தேஜஸ் போர் விமானத்திலிருந்து, அஸ்திரா ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை, விஞ்ஞானிகளுடன் இணைந்து, டி ஆர் டி […]

வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் இந்தியாவின் அஸ்திரா பிவிஆர் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. நேற்று, கோவா கடற்கரை பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்திலிருந்து இந்த ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நிலப்பரப்பிலிருந்து 20000 அடி உயரத்தில் பறந்து சென்ற தேஜஸ் போர் விமானத்திலிருந்து, அஸ்திரா ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சோதனையை, விஞ்ஞானிகளுடன் இணைந்து, டி ஆர் டி ஓ அதிகாரிகள் மற்றும் எச் ஏ எல் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும், தேஜஸ் போர் விமானத்தின் திறனை இது மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu