விண்வெளி வீரர்களாக பட்டம் பெற நாசா அழைப்பு

விண்வெளி வீரர்களாக விரும்பும் மக்களுக்கு நாசா புதிய செய்தி வெளியிட்டுள்ளது. விண்வெளி வீரராக பட்டம் பெற விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக விண்வெளி வீரர்களுக்கான தேடலை நாசா அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக, விண்வெளி வீரர்களுக்கான விண்ணப்பங்கள் உயர்ந்து வரும் சூழலில், இந்த ஆண்டு மிகப்பெரிய போட்டி நிலவும் என கருதப்படுகிறது. கடந்த 2020ல் 10 இடங்களுக்கு 12000 விண்ணப்பங்கள் குவிந்தது நினைவு கூறத்தக்கது. தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு, விண்வெளி நடைபயணம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட அடிப்படை திறன்களுக்கான […]

விண்வெளி வீரர்களாக விரும்பும் மக்களுக்கு நாசா புதிய செய்தி வெளியிட்டுள்ளது. விண்வெளி வீரராக பட்டம் பெற விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக விண்வெளி வீரர்களுக்கான தேடலை நாசா அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக, விண்வெளி வீரர்களுக்கான விண்ணப்பங்கள் உயர்ந்து வரும் சூழலில், இந்த ஆண்டு மிகப்பெரிய போட்டி நிலவும் என கருதப்படுகிறது. கடந்த 2020ல் 10 இடங்களுக்கு 12000 விண்ணப்பங்கள் குவிந்தது நினைவு கூறத்தக்கது. தேர்ந்தெடுக்கப்படுபவர் களுக்கு, விண்வெளி நடைபயணம், ரோபோட்டிக்ஸ் உள்ளிட்ட அடிப்படை திறன்களுக்கான பயிற்சி 2 ஆண்டுகளுக்கு நாசா மூலம் வழங்கப்படும். ஆண்டுக்கு 152000 டாலர்கள் சம்பளத்துடன், ஹவுஸ்டனில் அவர்கள் பணியமர்த்தப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க வேண்டுவோர் ஏப்ரல் 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu