நாசா வடிவமைத்து வரும் புதிய ராக்கெட் மூலம், இரண்டே மாதங்களில் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுவரை செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் யாரும் அனுப்பப்படவில்லை. தற்போது இருக்கும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு செவ்வாய் கிரகத்துக்கு ஒருமுறை சென்று வர 2 வருடங்கள் ஆகும். ஆனால், நாசாவின் பல்ஸ்ட் பிளாஸ்மா ராக்கெட் - பி பி ஆர் (PPR) மூலம் 2 மாதங்களில் சென்று வரலாம். தற்போதைய நிலவரப்படி வடிவமைப்பு கட்டத்தில் இந்த ராக்கெட் உள்ளது. இந்த ராக்கெட்டின் திறன் 100000 N த்ரஸ்ட் 5000 வினாடி இம்பல்ஸ் ஆகும். எனவே, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் மற்றும் பொருட்களை அனுப்புவதற்கு இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். மனித குலத்தின் அடுத்த படியாக படிக்கல்லாக விளங்கும் என நாசா தெரிவித்துள்ளது.