தைவானை சேர்ந்த முன்னணி கணினி தயாரிப்பு நிறுவனம் அசுஸ் ஆகும். இந்த நிறுவனம், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் பகுதியாக இந்தியாவில் தயாரிப்பை மேற்கொள்ள உள்ளது. அதன்படி, சீனாவில் இருக்கும் தனது முக்கிய உற்பத்தி மையத்தை வெளியேற்றி, இந்தியாவில் அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிளக்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உள்ளது.சென்னையில் புதிய உற்பத்தி ஆலை ஒன்று அசுஸ் தயாரிப்புகளுக்காக அமைக்கப்பட உள்ளது. இதற்காக, அரசாங்கத்தின் பி எல் ஐ திட்டத்தின் கீழ் 17000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. அசுஸ் நிறுவனம், 15 பில்லியன் டாலர்கள் அளவில் சந்தை மதிப்பை கொண்டுள்ளது. இந்த நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து விரிவாக்க பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. தனது உற்பத்தி மையத்தை சீனாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை அசுஸ் தொடங்கியுள்ளது.