வங்காள தேசத்தில் நட்சத்திர ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் 24 பேர் பலியாகினர்.
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இந்த தீ தரைதளத்தில் வைக்கப்பட்டது. அது வேகமாக மேல் தளங்களுக்கு பரவியது. இதனால் ஓட்டலில் தங்கி இருந்த 24 பேர் தீயில் கருகி பலியாகினர். இறந்தவர்களில் ஒருவர் இந்தோனேசியாவை சேர்ந்தவர். அது மட்டுமின்றி ஓட்டலின் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் சிலர் சிக்கியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதோடு அவாமி லீக் கட்சியின் அலுவலகம் மற்றும் அந்த கட்சி தலைவர்களின் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.