நைஜீரியாவில் படகு விபத்து - 64 விவசாயிகள் பலி

September 16, 2024

நைஜீரியாவில் படகு விபத்து ஏற்பட்டதில் 64 விவசாயிகள் பலியாகினர். வடமேற்கு நைஜீரியாவின் ஜம்பாரா மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றைக் கடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த கிழமையன்று, 70 பேர் படகில் சென்றார்கள். அப்போது, அந்தப் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 64 விவசாயிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மீட்புக் குழுவின் அதிகாரிகள் கூறுகையில், "மரத்தால் செய்யப்பட்ட […]

நைஜீரியாவில் படகு விபத்து ஏற்பட்டதில் 64 விவசாயிகள் பலியாகினர்.

வடமேற்கு நைஜீரியாவின் ஜம்பாரா மாநிலத்தில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றைக் கடக்கிறார்கள். இந்நிலையில் கடந்த கிழமையன்று, 70 பேர் படகில் சென்றார்கள். அப்போது, அந்தப் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 64 விவசாயிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மீட்புக் குழுவின் அதிகாரிகள் கூறுகையில், "மரத்தால் செய்யப்பட்ட படகு விபத்தில் சிக்கியது. மீட்பு பணியில் உள்ளூர் மக்கள் உதவினர். 3 மணி நேரத்திற்குப் பிறகு, 6 பேரை மட்டும் மீட்க முடிந்தது. 900-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தினமும் ஆற்றைக் கடந்து தங்கள் நிலங்களை அணுகுகிறார்கள். ஆனால் இரண்டு படகுகள் மட்டுமே இருப்பதால், அதிகமாக ஆட்களை ஏற்றி செல்கிறார்கள். இது கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது" என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu