மின்சார இருசக்கர வாகனத் துறையில் முன்னணியில் உள்ள எதெர் நிறுவனம், புதிய மின்சார இருசக்கர வாகனத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது.
எதெர் நிறுவனத்தின் புதிய வாகனம் 115 கிலோமீட்டர் வரையில் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 450 S என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனத்தின் ஆரம்ப விலை 129999 என சொல்லப்பட்டுள்ளது. இதில் 2.9 KWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 450X வாகனத்தில், புதிதாக பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக எதெர் நிறுவனம் அறிவித்துள்ளது.