மியான்மரின் ஆட்சிக் குழு, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் குற்றத்திற்காக மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் மொத்த சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மியான்மரில் ராணுவம்அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவத்தின் ஒடுக்குமுறையால் 2,300 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 15,000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கண்காணிப்பு குழு தகவல் ௯றியுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிக் காலத்தில் தேர்தல் முறைகேடுகள் மற்றும் ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுதல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக சூகிக்கு, ஏற்கனவே ஜுண்டா நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதற்கு முன் இவர் ஊழல் மற்றும் தேர்தல் விதிமீறல்கள் என குறைந்தது 18 குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சமீபத்திய வழக்கில், இராணுவக் காவலில் இருந்த சூகி, தொழிலதிபர் மவுங் வீக்கிடம் இருந்து 550,000 டாலர்கள் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆங் சான் சூகிக்கு மியான்மர் ராணுவ நீதிமன்றம் மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அதையடுத்து சூகிக்கு நீதிமன்றத்தில் "இரண்டு ஊழல் வழக்குகளுக்காக தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது". இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிகயின் மொத்த சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நீதிமன்ற விசாரணைகளில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சூகியின் வழக்கறிஞர்கள் ஊடகங்களுடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இ௫ப்பினும் சூகியின் உடல்நலம் நன்றாக இ௫ப்பதால் அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.