ஆஸ்திரேலியா தனது 400 ஷார்ட் ஸ்டே ஸ்பெஷலிஸ்ட் விசாவிற்கான விதிகளை கடுமையாக்கி உள்ளது. இனி இந்த விசாவைப் பெறுபவர்கள் ஒரு வருடத்தில் அதிகபட்சமாக மூன்று மாதங்கள் மட்டுமே ஆஸ்திரேலியாவில் தங்க முடியும். இந்த மாற்றத்தின் மூலம் உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், குறுகிய கால வேலைக்கு வழங்கப்படும் இந்த விசாவை நீண்ட கால வேலைக்கு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் அரசு முயற்சிக்கிறது. நீண்ட கால வேலைக்கு 482 விசாவை பயன்படுத்த வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு.
இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் இனி ஒரு வருடத்தில் பல முறை விண்ணப்பிக்க முடியாது. ஒவ்வொரு விண்ணப்பமும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டு, புதிய விதிகளுக்கு இணங்குகிறதா என்பது சரிபார்க்கப்படும். இந்த விசாவிற்கான செயலாக்கக் கட்டணம் AU$415 (இந்திய ரூபாயில் சுமார் 23,869 ரூபாய்) ஆகும்.