ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு கட்டுப்பாடு

August 29, 2024

ஆஸ்திரேலியா, 2025-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2,70,000 வெளிநாட்டு மாணவா்களை மட்டுமே அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டு மாணவா்களுக்கான விசா விண்ணப்பக் கட்டணம் கூடுவதோடு, புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ல் 7,17,500 வெளிநாட்டு மாணவா்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட்டனர். இது முந்தைய அளவுக்கு மிகவும் அதிகம். இந்தியா, 1.22 லட்சம் மாணவா்களுடன், அந்நாட்டில் அதிக […]

ஆஸ்திரேலியா, 2025-ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு 2,70,000 வெளிநாட்டு மாணவா்களை மட்டுமே அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு மாணவா்களுக்கான விசா விண்ணப்பக் கட்டணம் கூடுவதோடு, புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவில் உயர் கல்வி பயில விரும்பும் மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-ல் 7,17,500 வெளிநாட்டு மாணவா்கள் ஆஸ்திரேலியாவில் அனுமதிக்கப்பட்டனர். இது முந்தைய அளவுக்கு மிகவும் அதிகம். இந்தியா, 1.22 லட்சம் மாணவா்களுடன், அந்நாட்டில் அதிக எண்ணிக்கையுள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது. ஆஸ்திரேலிய கல்வியமைச்சர் ஜேசன் கிளார் கூறுகையில், வெளிநாட்டு குடியேற்றம் மற்றும் வீட்டு வாடகை உயர்வைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடைமுறை எடுக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிடுகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu