ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 2025 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தாவரங்களை வளர்க்க முயற்சிக்கின்றனர். இந்த முயற்சி எதிர்காலத்தில் ஒ௫ புதிய வாழ்வியலுக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளனர்.
இது குறித்து தாவர உயிரியலாளர் பிரட் வில்லியம்ஸ் கூறுகையில், பெரேஷீட் 2 விண்கலம் தனியார் இஸ்ரேலிய சந்திரன் மிஷன் மூலம் விதைகளை எடுத்துச் செல்லும். பின்னர் தரையிறங்கிய விண்கலம் சீல் செய்யப்பட்ட அறைக்குள் விதைகளைப் பாய்ச்சும். பின்னர் அந்த விண்கலம் அவ்விதைகளின் முளைப்பு மற்றும் வளர்ச்சியை கண்காணிக்கும் என்று கூறினார். இதன்மூலம் தாவரங்கள் நிலவின் சூழ்நிலைகளை எப்படி சமாளித்து விரைவாக முளைக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் என்று கூறினார். ஆஸ்திரேலியா மற்றும் இஸ்ரேலை சேர்ந்த விஞ்ஞானிகள் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தை லுனாரியா ஒன் அமைப்பு நடத்துகிறது. மேலும் இந்த திட்டம் உணவு, மருந்து மற்றும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கான தாவரங்களை வளர்ப்பதற்கான ஆரம்ப படியாகும். இவை அனைத்தும் நிலவில் மனித வாழ்க்கையை நிறுவுவதற்கு முக்கியமானவவை என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். அத்துடன் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவு பற்றாக்குறையை தடுக்க இந்த ஆராய்ச்சி உதவும் என்றார் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் கெய்ட்லின் பைர்ட். தற்போது தண்ணீர் இல்லாமல் வாழும் ஒரு வகை ஆஸ்திரேலிய புல் சந்திரனில் வளர்க்க தேர்தெடுக்கப்பட்டுள்ளது.