ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் நெகம்மரை சந்தித்தார்.
பிரதமர் மோடி ரஷ்ய பயணத்தை முடித்துவிட்டு ஆஸ்திரியா சென்றுள்ளார். அங்கு அவர் ஆஸ்திரிய பிரதமர் நெகம்மரை சந்தித்தார். அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இரு நாட்டு தலைவர்களும் இன்று அரசியல் மற்றும் பொருளாதார விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துவர் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் ஆஸ்திரியா வந்தது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரிய பிரதமர் தெரிவித்துள்ளார். முன்னதாக விமானம் மூலம் ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து பிரதமர் மோடி கூறுகையில், உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்த இணைந்து செயல்படும் என்று கூறியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரியாவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.