மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
மாநிலத்தில் சிறப்பாக செயல்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களையும் அவற்றின் வளர்ச்சிக்கு கடன் வழங்கி உறுதுணையாக இருந்த வங்கிகளையும் ஊக்கப்படுத்த தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது. கடந்த 2021 - 22ம் ஆண்டுக்கான, மாநில அளவிலான விருதுகளை கடந்த மாதம் முதல்வர் வழங்கினார்.
மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது வழங்கும் விழா, சென்னை சிட்கோ அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. விழாவில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த 40 தொழில் முனைவோருக்கு அமைச்சர் அன்பரசன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலர் அருண்ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், சிட்கோ மேலாண்மை இயக்குனர் மதுமதி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.