அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபிஷேகம் 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 16ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. இதில் குழந்தை வடிவிலான ராமர் சிலை கருவறையில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட இருக்கின்றன. இதனை கருவறையில் வைக்கும் முன்பு அயோத்தி நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. மேலும் இதில் அதிக மக்கள் கூடுவார்கள். குறிப்பாக அயோத்தி நகருக்கு வெளியே உள்ள பக்தர்கள் பொதுமக்களும் தரிசன செய்ய வாய்ப்புள்ளது. மேலும் இதனால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என என்பது குறித்து ராமர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்வது ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள் வைக்கப்படும் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.