அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா அகன்ற திரைகளில் ஒளிபரப்ப ஏற்பாடு

January 8, 2024

அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவை பாஜக அரசு நாடு முழுவதும் மிகப் பெரிய எழுச்சியாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அயோத்தியில் வருகிற 22ஆம் தேதி ராமர் கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யபடும் விழா நடைபெற உள்ளது. இதற்காக மோடி உட்பட 6000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய எழுச்சியாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அயோத்தியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் […]

அயோத்தியில் நடைபெற உள்ள ராமர் கோவில் திறப்பு விழாவை பாஜக அரசு நாடு முழுவதும் மிகப் பெரிய எழுச்சியாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
அயோத்தியில் வருகிற 22ஆம் தேதி ராமர் கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யபடும் விழா நடைபெற உள்ளது. இதற்காக மோடி உட்பட 6000 முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய எழுச்சியாக ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் அயோத்தியில் பல நூறு கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த இராமர் கோவில் மூன்று அடுக்குகளுடன் உருவாகி உள்ளது. இது 392 தூண்களை கொண்டுள்ளது. இந்த கோவில் 44 நுழைவாயில்களை கொண்டுள்ளது. இதை இந்திய மக்கள் அனைவரிடமும் எடுத்து செல்வதற்காக நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கிராம மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து கண்டுக்களிக்க அகன்ற திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அகன்ற திரைகளை பாரதிய ஜனதா மேலிடம் வாடகைக்கு எடுக்க அறிவுறுத்தி வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu