அஜர்பைஜன் பாகிஸ்தானிடமிருந்து போர் விமானிகள் வாங்கியது

September 28, 2024

அஜா்பைஜான், பாகிஸ்தானிடமிருந்து 160 கோடி டாலர் (சுமார் ரூ. 13,400 கோடி) மதிப்பில் போர் விமானங்களை வாங்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அஜா்பைஜானுக்கு ஜேஎஃப்-17 பிளாக்-3 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவானது. அஜா்பைஜான் விமானப் படையில் இந்த விமானங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏரோனாடிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் சீனாவின் செங்டு ஏர்க்ராஃப்ட் இண்டஸ்ட்ரி குழுமம் இணைந்து […]

அஜா்பைஜான், பாகிஸ்தானிடமிருந்து 160 கோடி டாலர் (சுமார் ரூ. 13,400 கோடி) மதிப்பில் போர் விமானங்களை வாங்கியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், அஜா்பைஜானுக்கு ஜேஎஃப்-17 பிளாக்-3 போர் விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் கடந்த பிப்ரவரி மாதம் முடிவானது.

அஜா்பைஜான் விமானப் படையில் இந்த விமானங்கள் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏரோனாடிக்கல் காம்ப்ளக்ஸ் மற்றும் சீனாவின் செங்டு ஏர்க்ராஃப்ட் இண்டஸ்ட்ரி குழுமம் இணைந்து உருவாக்கிய ஜேஎஃப்-17 பிளாக்-3 போர் விமானங்கள், பல்வேறு நவீன அம்சங்களை கொண்டதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu