முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 471 நாட்களுக்கு பிறகு சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வழங்கப் பண மோசடி செய்த வழக்கு சம்பந்தமாக, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் பலமுறை அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரினார்.இந்நிலையில் 471 நாட்களுக்கு பிறகு அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.