20 மணி நேரத்தில் பெய்லி பாலம் அமைத்து மீட்பு பணி

August 2, 2024

கேரள மாநிலம் வாயநாட்டில் மீட்பு பணிக்காக இராணுவத்தினர் 20 மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். வாயநாட்டில் இரண்டு கிராமங்களை இணைக்கும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீட்பு பணியை மேம்படுத்த ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு டெல்லி, பெங்களூரில் இருந்து இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். இதனை அடுத்து இந்தியா ராணுவ வீரர்கள் […]

கேரள மாநிலம் வாயநாட்டில் மீட்பு பணிக்காக இராணுவத்தினர் 20 மணி நேரத்தில் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர்.

வாயநாட்டில் இரண்டு கிராமங்களை இணைக்கும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மீட்பு பணியை மேம்படுத்த ஆற்றின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு டெல்லி, பெங்களூரில் இருந்து இராணுவத்தின் பொறியியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டனர். இதனை அடுத்து இந்தியா ராணுவ வீரர்கள் இருபது மணி நேரத்தில் ஒரு தற்காலிக பாலத்தை கட்டி முடித்து, மீட்புப் பணிகளுக்கு வழிவகுத்தனர்.
இதன் மூலம் சிக்கித் தவித்த மக்களை மீட்கவும், உணவு, தண்ணீர், மருத்துவ உதவி போன்ற அவசிய பொருட்களை கொண்டு செல்லவும் இந்தப் பாலம் பெரிதும் உதவியது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu