பஜாஜ் ஆட்டோ நிகர லாபம் 1469 கோடி

April 29, 2023

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம், தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 1468.95 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 1432.88 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7974.84 கோடியாக இருந்தது. அது, கடந்த மார்ச் 31 ஆம் தேதியில், 8905 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், […]

பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம், தனது நான்காம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் 1468.95 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், 1432.88 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 7974.84 கோடியாக இருந்தது. அது, கடந்த மார்ச் 31 ஆம் தேதியில், 8905 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2022 ஆம் நிதியாண்டில் 5018.87 கோடியாக இருந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த லாபம், 2023 ஆம் ஆண்டில் 12% உயர்ந்து, 5627.6 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 10% உயர்ந்து, 36428 கோடியாக பதிவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu