ஐஐஎஃப்எல் தங்க நகை கடன் வழங்குவதை மத்திய ரிசர்வ் வங்கி தடை செய்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஐஐ எஃப் எல் நிறுவனம் 1995இல் நிர்மல் ஜெயின் என்பவர் மூலம் தொடங்கப்பட்ட நிதி வர்த்தக சேவை நிறுவனம் ஆகும். இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் மட்டும் இன்றி பல உலக நாடுகளிலும் வர்த்தக சேவையை புரிந்து வருகிறது. பல்வேறு நிதி சேவைகளில் ஈடுபட்டு வரும் இந்த நிறுவனமானது தங்க நகை கடன் வழங்குவதிலும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி ஐஐஎஃப்எல் தங்க நகை கடன் வழங்குவதை தடை செய்துள்ளது. மேலும் இது உடனடியாக அமலுக்கு வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதேபோன்று இதுவரை விநியோகிக்கப்பட்ட தங்க நகை கடன் தொடர்பான வசூல் மற்றும் மீட்பு நடைபெறுவதற்கு எந்தவித தடையும் இல்லை. இது குறித்து அறிக்கையில் ஆர்பியை தெரிவித்துள்ளதாவது, தங்க நகை கடன் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் இருந்துள்ளது. மேலும் ஆபரணங்களில் தூய்மையை பரிசோதிப்பதில் கடன் வழங்கும்போது ஒரு நடைமுறையும் தவணைகளை கட்ட தவறி அவர்களின் நகைகளை ஏலம் விடும்பொழுது வேறொரு நடைமுறையும் கடைபிடிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் கட்டணமானது சீரான கட்டண அமைப்புடனோ, வெளிப்படுத்தன்மையோ இன்றி உள்ளது. இதனை ஆர்பிஐ சிறப்பு தணிக்கை குழு தணிக்கை செய்து முடித்ததும் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.