திப்புசுல்தான் கனவுகள் புத்தக விற்பனைக்கு தடை - பெங்களூரு நீதிமன்றம்

November 24, 2022

'திப்புசுல்தான் கனவுகள்' என்ற புத்தகத்தை விற்பனை செய்ய பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரபல நாடக இயக்குனரும், எழுத்தாளருமான அட்டான்டா கார்யப்பா 'திப்பு நிஜ கனசுகளு' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இத்துடன் திப்பு சுல்தான் சம்பந்தமான நாடகங்களையும் நடத்துகிறார். இந்நிலையில், அட்டான்டா கார்யாப்பா எழுதிய 'திப்பு நிஜ கனசுகளு' புத்தகம் மதம், மதநல்லிணக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்ததும் வகையிலும், பொய் தகவல்களும் நிரம்பியுள்ளது. மேலும், எழுத்தாளர் தான் கூறிய கருத்துக்கு எந்த ஆவணங்களையும் காட்டவில்லை. எனவே புத்தகத்துக்கு […]

'திப்புசுல்தான் கனவுகள்' என்ற புத்தகத்தை விற்பனை செய்ய பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பிரபல நாடக இயக்குனரும், எழுத்தாளருமான அட்டான்டா கார்யப்பா 'திப்பு நிஜ கனசுகளு' என்ற புத்தகத்தை எழுதி உள்ளார். இத்துடன் திப்பு சுல்தான் சம்பந்தமான நாடகங்களையும் நடத்துகிறார். இந்நிலையில், அட்டான்டா கார்யாப்பா எழுதிய 'திப்பு நிஜ கனசுகளு' புத்தகம் மதம், மதநல்லிணக்கத்துக்கு களங்கம் ஏற்படுத்ததும் வகையிலும், பொய் தகவல்களும் நிரம்பியுள்ளது. மேலும், எழுத்தாளர் தான் கூறிய கருத்துக்கு எந்த ஆவணங்களையும் காட்டவில்லை.

எனவே புத்தகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பெங்களூரு மாவட்ட வக்பு வாரிய முன்னாள் தலைவர் ரபிஉல்லா, பெங்களூரு 15வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி ஜெ.ஆர். மன்டோத்சா முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி, திப்பு நிஜ கனசுகளு புத்தகத்தை பதிப்பகத்தினர் எங்கும் விற்பனை செய்ய கூடாது என்றும், அட்டான்டா கார்யப்பா, திப்பு சம்பந்தமான நாடகம் நடத்த தடையில்லை என்றும் உத்தரவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu