வங்காளதேசத்தில் ரெயிலில் தீ விபத்து - 5 பேர் பலி

January 6, 2024

வங்காளதேசத்தில் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர். வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு மேற்கு பகுதியில் ஜேசோர் என்ற நகர் உள்ளது. இங்கிருந்து பெனா போல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தீப்பிடித்தது. இது வேகமாக நான்கு பெட்டிகளில் பரவியது. இதனால் பயணிகள் பயந்தபடியே வெளியேறினார். இருந்தபோதிலும் இதில் ஐந்து பேர் பலியாகினர். வங்கதேசத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி வந்த எதிர்க்கட்சியினர் இதுபோன்ற […]

வங்காளதேசத்தில் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 5 பேர் பலியாகினர்.

வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு மேற்கு பகுதியில் ஜேசோர் என்ற நகர் உள்ளது. இங்கிருந்து பெனா போல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ரயில் தீப்பிடித்தது. இது வேகமாக நான்கு பெட்டிகளில் பரவியது. இதனால் பயணிகள் பயந்தபடியே வெளியேறினார். இருந்தபோதிலும் இதில் ஐந்து பேர் பலியாகினர். வங்கதேசத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறி வந்த எதிர்க்கட்சியினர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

கடந்த மாதம் இதே போன்று ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு நான்கு பேர் பலியாகினர். அப்போது தேசியவாத கட்சியின் மீது குற்றம் சாட்டு சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த குற்றச்சாட்டை தேசியவாத கட்சி மறுத்து இருக்கிறது. வங்காளதேசத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முக்கிய கட்சிகள் புறக்கணித்துள்ளனர். அதோடு பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் செய்கின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu