மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்து மற்றும் வங்காள தேசம் அணிகளுக்கிடையே ஆன போட்டியில் வங்காளதேச அணி வெற்றி பெற்றுள்ளது.
நேற்று நடைபெற்ற மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தாய்லாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய தாய்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வங்காளதேசம் அணி எளிதாக 17.3 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது.