வங்காளதேசத்தில் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம்

September 2, 2024

வங்காளதேசத்தில் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்காளதேச தலைநகர் டாக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஷனுல் ஹகி சாலைவிபத்தில் படுகாயமடைந்து டாக்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி, அவர்களை தாக்கினர். இந்த தாக்குதலைக் கண்டித்து மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் […]

வங்காளதேசத்தில் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்காளதேச தலைநகர் டாக்காவைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அஷனுல் ஹகி சாலைவிபத்தில் படுகாயமடைந்து டாக்கா அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாக மாணவன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டி, அவர்களை தாக்கினர்.

இந்த தாக்குதலைக் கண்டித்து மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவிலியர்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் உரிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu