வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக 2000 மேற்பட்டோர் நேற்று தலைநகர் டாக்காவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கூட்டத்தை கலைக்க காவல்துறையினர் முயன்றனர். அப்பொழுது அவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மாணவர்களை அடக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசினர். கையறி வெடிகுண்டுகளை பயன்படுத்தினர். அதில் 2 பேர் பலியாகினர். அப்பொழுது பிரதமர் பதவி விலக வேண்டும் என்று சிலர் கோஷமிட்டனர். இதையடுத்து பிரதமர் ஹசீனா நாடு முழுவதும் டிக் டாக், இன்ஸ்டாகிராம், வாட்சாப், யூடூப் மற்றும் டெலிக்ராம் போன்ற சமூக ஊடகங்களை முடக்க உத்தரவிட்டுள்ளார்.