வங்காளதேசத்தில் 5வது முறையாக பிரதமராகிறார் ஷேக் ஹசீனா

January 8, 2024

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராகிறார். நேற்று வங்கதேசத்தில் பன்னிரண்டாவது நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. இதனை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். மேலும் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கிடையே சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரி […]

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா 5வது முறையாக பிரதமராகிறார்.

நேற்று வங்கதேசத்தில் பன்னிரண்டாவது நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற்றது. இதனை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தனர். மேலும் பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கிடையே சுமார் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் தொடங்கப்பட்டது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 50 சதவீத இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

நடப்பு நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜனவரி 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி அந்த நாட்டின் 300 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு முன்பாக ஒரு தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்ததால் 299 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 11.9 கோடி மக்கள் வாக்களித்தனர். சுமார் 27 அரசியல் கட்சிகளை சேர்ந்த 1534 வேட்பாளர்கள், 436 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நாடு முழுதும் 42 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த தேர்தலில் முதல் முறையாக தபால் வாக்கு முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு பணியில் மூன்று இந்திய பிரதிநிதிகள் உட்பட 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பார்வையாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu