வங்கதேச பிரதமர் ஹசீனா பதவி விலகுகிறார்

August 5, 2024

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று மாலை முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இராணுவம் அங்கு ஆட்சியில் கைப்பற்றுகிறது […]

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று கூறி ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நாடு முழுவதும் நேற்று மாலை முதல் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் உள்ள பிரதமர் இல்லத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து இராணுவம் அங்கு ஆட்சியில் கைப்பற்றுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அங்கு நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து அவர் பதவி விலகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு ராணுவ ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்ததாக அந்நாட்டு நாளிதழ் செய்தி ஒன்று கூறியுள்ளது. இது குறித்து வங்கதேச சட்டத்துறை அமைச்சர் கூறுகையில், என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கு என்பது எனக்கே தெரியவில்லை. ஆனால் நிலைமை மோசமாக உள்ளது என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu