வங்காளதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு பின் திறக்கப்பட்டுள்ளன.
வங்காள தேசத்தில் வன்முறை அதிகரித்ததால் கடந்த மாதம் 17ஆம் தேதி அங்குள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாட்டில் அமைதி நிலை மீண்டும் திரும்பியது. இதையடுத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறக்க இடைக்கால அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 15ஆம் தேதி கல்வி அமைச்சகம் அனைத்து கல்வி நிறுவனங்களும் 18 ஆம் தேதி முதல் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன.