வங்கதேசம் - வரலாற்று உச்சத்தில் டெங்கு பாதிப்பு

September 19, 2023

வங்கதேசத்தில், வரலாறு காணாத வகையில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தினசரி பாதிப்பில் வரலாற்று உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 3122 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, தினசரி பாதிப்பில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. டாக்காவில் இதுவரை 750 டெங்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு தொடக்கம் முதல், வங்கதேசத்தில் 167684 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில், […]

வங்கதேசத்தில், வரலாறு காணாத வகையில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், தினசரி பாதிப்பில் வரலாற்று உச்சம் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நிறைவடைந்த 24 மணி நேரத்தில், 3122 புதிய டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, தினசரி பாதிப்பில் வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. டாக்காவில் இதுவரை 750 டெங்கு நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு தொடக்கம் முதல், வங்கதேசத்தில் 167684 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அவற்றில், 156425 பேர் டாக்கா பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், டெங்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 800 ஐ தாண்டி வரலாற்று உச்சமாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, நிகழ் மாதத்தில் மட்டும் 229 இறப்புகள் பதிவாகியுள்ளது. ஐநா சபை, தொடர்ச்சியாக வங்கதேசத்துக்கு உதவிகள் வழங்கி வருகிறது. ஆனாலும், அதிகரித்து வரும் டெங்கு பாதிப்புகள் அங்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu