வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறை முடிவுக்கு வந்தது.
இதையடுத்து 10 நாட்களுக்குப் பிறகு இணைய சேவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஜூலை 18-ஆம் தேதி கைபேசி இணைய சேவை முடக்கப்பட்டது. மறுநாள் பேரிடர் மேலாண்மை துறையின் கட்டிடத்திற்கு தீவைக்கப்பட்டது. இதன் காரணமாக இணைய சேவை 30 முதல் 40% பாதிக்கப்படும் என்று வங்கதேச இணைய சேவை தெரிவித்தது. அதையடுத்து ஒரு மணி நேரத்தில் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி முதல் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது. மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து பயனர்களுக்கும் 5 ஜி.பி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.