வங்கதேசத்தில் வன்முறை சம்பவங்களுக்குப் பிறகு மூடப்பட்ட இந்திய விசா விண்ணப்ப மையங்கள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டன.
டாக்கா, சட்டோகிராம், ராஜ்ஷாஹி, சில்ஹெட், மற்றும் குல்னா ஆகிய நகரங்களில் விசா சேவைகள் மீண்டும் வழங்கப்படுகின்றன. வங்கதேசத்தில் உள்ள மாணவா்கள், தொழிலாளா்கள், மற்றும் அவசர மருத்துவ பயணிகள் இந்த மையங்களில் விசா விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களில் முன்பே நியமனம் பெற்ற நபா்களும் இம்மையங்களை அணுகலாம். வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் வன்முறையாக மாறி 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, பிரதமா் ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கலைக்கப்பட்டு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த மாதம் பதவியேற்றது.