வங்கதேசத்தில் புதிய தலைமை நீதிபதியாக சையது ரஃபாத் அகமது நேற்று பதவியேற்றார்.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் நடைபெறுகிறது. அவர்கள் நீதித்துறையை மறுசீரமைக்ககோரினர். இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் சனியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் வங்கதேசத்தின் புதிய தலைமை நீதிபதியாக சையது ரஃபாத் அகமது நேற்று பதவி ஏற்றார். அவர் அதிபர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது சகாபுதீன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவை அமைச்சரவை செயலர் ஹுசைன் நடத்தினார் இன்று கூறப்பட்டுள்ளது.